நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, July 05, 2019

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?

ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மா இருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.
"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...' 
"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க... கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'

இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விட அதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னை ஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்
"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.
இந்த வரிகள் 27.05.2013 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளிவந்த ஷங்கர்பாபு எழுதிய  "வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்'' கட்டுரையின் ஒருபகுதி.
80களின் இறுதி மற்றும் 90களின் பிற்பகுதி வரை வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் (இப்போது போல் வேலைவாய்ப்பு பெருகாத நேரத்தில்) வீட்டுக்குவீடு வேலை இல்லாத இளைஞர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. அதை மையப்படுத்திதான் அந்த காலகட்டத்தில் பல தமிழ் திரைப்படங்களும் வந்தன.
இப்போது அந்த மாதிரி கதைகளுடன் படங்கள் வராததால் தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழிந்து இளைஞர்கள் அனைவரும் பிசியாகிவிட்டதாக நாம் தப்பாக நினைக்க கூடாது.
உண்மையில் எந்த ஒரு வேலையை செய்வதை விட சும்மா இருக்குறது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப கஷ்டம்தான்.

No comments:

Post a Comment