நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, March 23, 2019

2019ல் தேர் சீக்கிரமா ஓடுதா?

திருவாரூர் சரவணன்
15–03–2019
திருவாரூர் பெரிய கோவில் வளாகத்தில் 80 வயது பெரியவரும் 20 வயது இளைஞரும்...
‘என்ன தாத்தா... இந்த வருசம் இவ்வளவு சீக்கிரமா தேர் ஓடப்போகுது?’
‘தொடர்ந்து ஒரு விசயம் பழக்கப்பட்டுப்போச்சுன்னா சரியானது எது, தப்பானது எதுன்னே தெரியாதுன்னு சொல்லுவாங்க. அது சரியாத்தான் இருக்கு.’
‘என்ன தாத்தா சொல்றீங்க?’
‘பின்ன, ஆகம விதிப்படி திருவாரூர் தேர் பங்குனி மாசம் ஆயில்யம் நட்சத்திரத்தன்னைக்கு ஓடி தீர்த்தவாரி முடிஞ்சுதான் பாததரிசனம் ஆகணும்னு சொல்றாங்க.
அதை வெச்சுப் பார்த்தா இந்த வருசம் மார்ச் 18ஆம் தேதி ஓட வேண்டிய தேர் ஏப்ரல் 1ஆம் தேதி ஓடப்போகுது. சரியா சொன்னா பதினஞ்சுநாள் தாமதம்.
ஆனா, கடந்த பல ஆண்டுகளாகவே நிர்வாக காரணம்னு சொல்லி சித்திரை, வைகாசின்னுதான் தேர் ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் உங்க வயசுல இருக்குற பிள்ளைங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் தேர் ஓடுதுன்னு அதிர்ச்சியா கேட்குறீங்க...’
‘அப்டியா தாத்தா?’


(உறுதிப்படுத்தப்படாத ஆனால் உண்மையாகவும் இருக்குமோ  என்று எண்ணக்கூடிய செய்திகள் அப்டியா தாத்தா பகுதியில் இடம்பெறும்.)

No comments:

Post a Comment