நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, March 23, 2019

இப்படியுமா கூட்டணி?


திருவாரூர் சரவணன்
15–03–2019
இப்படியுமா கூட்டணி?
எதிரும் புதிருமா நாலு அண்ணன் தம்பியும் சண்டை போட்டுகிட்டவங்க ஒண்ணா போறாங்களே?
நாலு பேரும் நாலு கட்சியில இருந்தாங்களாம். இப்போ நாலு தலைமையும் கூட்டணி வச்சிகிட்டதால தேர்தல் வரைக்கும் ஒண்ணா இருப்பாங்களாம்-.
***
எல்லோருக்கும் டிக்கட்
பஸ் நஷ்டத்துல ஓடுறது வாஸ்தவந்தான் தலைவரே. அதுக்காக அந்த பஸ்சை ஓட்டுற டிரைவரையும், டிக்கட் கொடுக்கப்போற கண்டக்டரும் பயணச்சீட்டு வாங்கிட்டுதான் டூட்டி பார்க்கணும்னு சட்டம் கொண்டு வரச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.
***
கட்சியின் கொள்கை

உன்னைய ஏன் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க?
பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிக்கக் கூடாதுன்னு சொன்னேன். கட்சி கொள்கைக்கு விரோதமா பேசுறவங்க கட்சிக்கு தேவையில்லைன்னு வெளில அனுப்பிட்டாங்க.

No comments:

Post a Comment