நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, June 08, 2019

80:20 கோட்பாடு

எஸ்.எல்.வி மூர்த்தி எழுதிய எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம் நூலில் இருந்து...
வில்ஃபிரெடோ பாரெட்டோ என்ற இத்தாலிய பொருளாதார மேதை ஒரு கோட்பாட்டை கண்டறிந்து தெரிவித்தார்.
அதாவது மொத்த நிலங்களில் 80 சதவீத நிலங்கள் 20% மக்களிடம்தான் இருக்கின்றன,
80 சதவீத பிரச்சனைகள் 20 சதவீத காரணங்களால்தான் உருவாகின்றன.
80 சதவீத வருமானம் 20 சதவீத வாடிக்கையாளர்களிடமிருந்தே வந்து விடுகின்றன.
இப்படி எந்த ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து பார்த்தாலும் 80க்கு 20 என்ற கோட்பாடு கச்சிதமாக பொருந்தும் என்று தெரிவித்தார்.
நீங்களும் முயன்று பாருங்களேன்.

No comments:

Post a Comment