நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 14, 2019

வெற்றி விதிகள்

நெப்போலியன் ஹில் எழுதிய வெற்றிவிதிகள் பாகம் 2 என்ற நூலில் இருந்து...

கற்பனைத்திறனை வினோதக் கனவு என்றே பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அது நடைமுறைச் சாத்தியம் நிறைந்த கருவி என்பதே உண்மையாகும்.
கற்பனைத் திறன் ஒரு பயனுள்ள கருவி. உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும் ஆற்றல் மிக்க துணைவனாக இது உதவி செய்யும்.
இன்னும் கூடுதல் சான்று தேவைப்பட்டால் வால்ட் டிஸ்னியின் சாம்ராஜ்யத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கற்பனையில் உருவான வடிவங்களுக்கு உருவம் கொடுத்து அவர் வெற்றி பெற்றார்.
கற்பனையின் குணம், உருவாக்கும் திறனை ஏற்படுத்துவதாகும். இது அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள் அலைகளாக மாறி காற்றில் பரவுகின்றன. வானொலி அலைகளை ரேடியோ கருவி உள்வாங்கிக் கொள்வது போல, இந்த எண்ண அலைகளையும் உள்வாங்க இயலும்.
உங்கள் கற்பனை உங்களது சொத்து! அதைப் பயன்படுத்துங்கள். எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும்.

No comments:

Post a Comment