நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 21, 2019

தெப்பமும் / சாலையோர வியாபாரிகளும்

கடந்த ஜுன் 13ஆம் தேதி திருவாரூர் கமலாலயத்தில் தெப்பம் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனால் அன்று மாலை நேரத்திலேயே நிறைய தரைக் கடை வியாபாரிகள் மேலவீதியில் பொருட்களை காட்சிப்படுத்தும் வேலைகளில்   ஈடுபட்டுக் கொண்டு இந்தார்கள்.
அவர்களில் நிறைய பேர் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள்தான்.
அதை தவிர்த்துப் பார்த்தால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள், பெண்களின் ஒப்பனைக்கு பயன்படும் பொருட்களை விற்கும் கடைகள்.
அருகருகே இரண்டு கடைகளை அமைத்துக் கொண்டிருந்தவர்கள் ‘‘இந்த மூன்று நாட்களும் நன்றாக வியாபாரம் நடந்தால் அடுத்த நான்கு மாதங்கள் வரை நாட்களை கடத்தி விடலாம்’’ என்று  பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.
இவர்களிலேயே பெரிய அளவில் முதல் போட்டு செய்பவர்கள் வேண்டுமானால் ஒன்றிரண்டு லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்ய முடியும்.
மற்றவர்கள் ஒவ்வொருவரும் மிஞ்சிப்போனால் சில ஆயிரங்கள் அல்லது பல ஆயிரங்களில்தான் வியாபாரம் செய்ய முடியும்.
அதை வைத்து மூன்று நான்கு மாதங்கள் வாழ்க்கையை நகர்த்தி விடலாம் என்ற அளவில்தான் அவர்கள் நம்மிடமிருந்து சம்பாதிக்கப் போகிறார்கள்.
பெரிய ஷோரூம் வைத்திருப்பவர்கள் ஆள் சம்பளம் முதல் நிர்வாக செலவு, அரசுத் துறைகளுக்கு கையூட்டு கொடுப்பது வரை செலவு இருக்கிறதே என்று விலை உயர்வை நியாயப்படுத்துகிறோம்.
ஆனால் இந்த சாலையோர வியாபாரிகளுக்கு வாடகை, கரண்ட் பில் உள்ளிட்ட என்ன செலவு இருக்கிறது என்று பேரம் பேசவும் தவறுவதில்லை.
திருவிழாகால வருமானம் அவர்களின் அடுத்த பல நாட்களுக்கு வாழ்வாதாரம் என்பதை புரிந்து கொண்டு திருவிழாக்கால வியாபாரிகளிடமும் நாம் கணிசமாக வியாபாரம் செய்வோமே...!

---பா.விநாயகசுந்தரம்

No comments:

Post a Comment