நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 28, 2019

வாழ்வு கொடுத்த உண்மை!


சில தரகர்கள் தங்களின் கமிஷனுக்காக வாயில் வந்த பொய்களை எல்லாம் அள்ளி விடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்காக நான் வேலை விஷயமாக மதுரையில் தங்கியிருந்த போது அந்தப் பகுதி இளைஞனுக்கு பெண் பார்த்தனர்.

சொந்தமாக லோடு வேன் இருக்கிறது, பிளஸ்டூ வரை படித்திருக்கிறான்...என்றெல்லாம் பெண் வீட்டாரிடம் பொய் சொல்லியிருக்கிறார் தரகர்.


இந்தப் பொய்களை அப்படியே, மெயின்டெயின்  செய்ய மாப்பிள்ளையின் பெற்றோரும் முடிவு செய்து விட்டார்கள். ஏற்பாடுகளும் நிச்சயதார்த்தம் வரை போய் விட்டது.
தரகர் சொன்ன பொய்கள் மாப்பிள்ளைக்குத் தெரிந்ததும் நேராக பெண்ணின் வீட்டிற்கே போய், நான் பத்தாவது பெயில். சம்பளத்திற்குதான் லோடு வேன் ஓட்டுகிறேன். என் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. சில ஆண்டுகளில் சொந்தமாக வண்டி வாங்கிவிடுவேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொடுங்கள்!...என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.
மாப்பிள்ளை உண்மையை சொன்னதால் பெண் வீட்டில் அனைவருக்கும் மனப்பூர்வ சம்மதம். திருமணம் நல்லபடியாக நடந்தது. சமீபத்தில்தான் அந்த இளைஞர் பழைய சின்னயானை ஒன்றை சிறிது தொகை கடனுடன் வாங்கியிருக்கிறார்.
ஆனால் உலக வரலாறு மிகவும் முக்கியம்பெண் வீட்டார் சம்மதமும் சரி, மாப்பிள்ளை மினி லோடு வேன் வாங்கியதும் சரி.
இது விதிவிலக்குதான் நண்பர்களே...
பழைய பேப்பர் என்ற குறிப்புகள் இருக்கும் பதிவுகள் அனைத்தும்
சில பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை -
இங்கே மீள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உண்மையில் பொருளாதார பாதுகாப்பை மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள். இதை முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது பிறந்த குழந்தையிலிருந்து இருபத்தைந்து வயது வாலிபன் என்ற அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்ப சொத்து, பார்க்கும் பணி என்ற பல காரணங்கள் இருக்கும்.
பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அந்த அளவில் இருந்து படிப்படியான வளர்ச்சிதான் பெரும்பாலும் சாத்தியமாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் மிகப்பெரிய ஆடம்பரத்துக்கு உடனடியாக ஆசைப்படுவதால்தான் தொண்ணூறு சதவீதப் பிரச்சனை.
ஒரு வயதுக் குழந்தை திடீரென இருபத்தைந்து வயது வாலிபனாவது சாத்தியமா. முடியாது. ஆனால் உரிய காலகட்டத்தில் அது சாத்தியம்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் குடும்பத்தில் 95 சதவீத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. - இதை நான் சொல்லவில்லை. முருக பக்தரான கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய பொன்மொழி.

No comments:

Post a Comment