நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 17, 2019

உணர்வு மனம் - ஆழ்மனம்

எஸ்.எல்.வி மூர்த்தி எழுதிய எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம் நூலில் இருந்து...
மனித மனம் உணர்வு மனம், ஆழ்மனம் என்று இரண்டு நிலைகளில் செயல்படும்.
உணர்வு என்பது பல கேள்விகள் கேட்கும். அதாவது மனசாட்சி.
ஹீரோவின் தங்கைக்கு வியாதி. பணம் வேண்டும் என்று அலைகிறான். காலில் ஒரு பெட்டி தட்டுப்படுகிறது. எடுத்துப் பார்த்தால் அதில் ஆப்ரேசனுக்கு வேண்டிய முழு தொகை.
அப்போது நேர்மையா பாசமா என்று கேள்வி எழும்பும். ஹீரோவின் மனசாட்சி நேர்மைதான் முக்கியம் என்று சொல்லி பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க சொல்லும்.
ஆனால் ஆழ்மனம் இப்படி கேள்வி கேட்காது. ஒரு எண்ணத்தை ஆழமாக விதைத்து விட்டால் சரியா தப்பா என்று கேள்வி கேட்காமல் நிறைவேற்றிக் காட்டும்.

No comments:

Post a Comment