நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 10, 2019

விலைவாசி உயர்வுகள்...

எந்த ஒரு விலை உயர்வு அறிவித்தாலும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி அப்படின்னு அமர்க்களப்படுத்தும். உண்மையில் இந்த விலை வாசி உயர்வை சுமக்கப்போறவன் கத்த கூட தெம்பில்லாம நசுங்கிப்போய் கிடப்பான்.
அரசாங்க பதிவேடுகளை பேப்பர்ல மட்டுமே பராமரிச்சுகிட்டு இருந்த காலத்துல தொட்டதுக்கும் சென்னைக்கே மொத்த தமிழகமும் ஓடி வரவேண்டி இருந்துச்சு. இப்போ ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்படி இப்படின்னு ஓரளவு நிலைமை பரவாயில்லை.
ஒரு மாணவன் அதிகபட்சம் 5 முதல் 15 நிமிஷத்துக்குள்ள நடந்தே அவனோட பள்ளிக்கூடத்துக்கு போற மாதிரி அருகாமையில இருக்குற பள்ளிகளோட தரத்தை உயர்த்தி ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில நியமிக்கிற வேலையை எந்த அரசு வந்தாலும் செய்யப்போறதே இல்லைன்னுதான் தோணுது.
இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் பார்த்து பார்த்து எரிபொருள் சேமிப்புக்கான நீண்ட கால திட்டத்தை அமல்படுத்துறதை விட்டுட்டு நடுத்தர மக்களை சுரண்டக்கூடிய நடவடிக்கைகளை மட்டும் அயல் நாடுகள் கிட்ட இருந்து நம்ம அரசுகள் எப்படித்தான் கத்துக்குதோ தெரியலை.
ஐநூறு ரூபாய்க்கு கூட வேலை பார்க்காம அம்பதாயிரம் சம்பாதிக்கிற அல்லது சம்பளம் வாங்குறவங்களைப் பத்தி கவலை இல்லை. கட்டிடத் தொழிலாளி மாதிரி சில வகை தொழில் செய்யுற லேபர்களும் விலைவாசி உயர்வைக்காரணம் காட்டி கூலியை உயர்த்திடுவாங்க.
இதுல வீணாப்போய் நசுங்குறது வறட்டு கவுரவம் பார்த்து வாழ வேண்டியிருக்குற நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான். அவங்க ஏன் கவுரவம் பார்க்கணும்னு சிலர் கேட்கக்கூடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிச்சதா ஒரு சர்டிபிகேட்டோட இருக்குறவங்கதான் வெடிச்சுகிட்டு வர்ற விலைவாசியோட வேகத்துக்கு சம்பளம் அதிகரிக்காத இடத்துல மாட்டிகிட்டு அவதிப்படுறாங்க.
இதையெல்லாம் பார்த்தா முடியுமா?...விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி சம்பாதிக்க கத்துக்கணும்னு அறிவுரைக்கெல்லாம் பஞ்சமே இருக்காது.
இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை வறுமையான சூழ்நிலையிலேயே வெச்சிருக்குறதன் வெளிப்பாடுதான் அரசுப்பள்ளிகள் நிறைய தடுமாறுவதும், கல்வித்தந்தைகள் நிறைய உருவாவதும்.
அரசு ஊழியர்களில் சில பணியிடங்களுக்கு ஆட்சியாளர்கள் மிக அதிக அளவு சம்பளத்தை ஏற்றி விட்டதே அந்த பணி நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகத்தான் என்று ஒருவர் சொன்னார்.
அப்டியா?
இந்த கட்டுரை வலைப்பூவில் முதலில் எழுதப்பட்ட தேதி - 17.11.2011
-அழகர்நம்பி

No comments:

Post a Comment