நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 10, 2019

செங்கல் சுவரும் கருங்கல் சுவரும்...

எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம் என்ற நூலில் இருந்து...
இந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் கட்டாயமாக இந்த தகுதி இருக்க வேண்டும் என்று ஆட்களை பணியமர்த்துவது செங்கற்கள் மூலம் சுவர் எழுப்புவது போன்றது.
உனக்கு இந்த திறமை இருக்கா... சரி... என் கம்பெனியில் நீ இந்த வேலையை பார் என்று நியமனம் செய்வது ஒழுங்கற்ற வடிவங்கள் கொண்ட கருங்கற்களை பொருத்தமான வகையில் வைத்துக்கட்டி சுவர் எழுப்புவது போன்றது.
***
முத்து படத்தில் நாடகக்குழு ஆட்கள் செய்து கொண்டிருந்த வேலையை கேட்டு, அதன்படி நீ கூட்டு, நீ குதிரையை கவனி என்று செந்தில் அனுப்பி வைப்பாரே... இந்த மேனேஜ்மெண்ட் தத்துவத்தை அவர்களுக்கு தெரியாமலேயே நகைச்சுவையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
***
சோனி நிறுவனர் அகியோ மொரிட்டோ தொழில் துறையில் உருவாக்கிய கொள்கையும் மிக முக்கியமானது.
ஊழியர்கள் சுய ஊக்கத்துடன் செயல்படுவது அவசியம். அப்படி செய்தால் ஒவ்வொரு ஊழியரும் வேலை பார்க்கிறாரா இல்லையா என்று கண்காணித்து மேய்க்கும் வேலை குறைவு. உண்மைதான்.
***
மாஸ்லோவின் பிரமிடு படிநிலை என்று ஐந்து விதிகள் கொடுக்கப்பட்டிருந்தன.
சாமானியன் ஒருவன் இந்த சூழ்நிலைகளில்தான் இருக்க முடியும் என்று மிக மிக எளிமையாக உணர முடிந்தது.
1. உயிர் வாழ்க்கைத் தேவைகள்
(உணவு, குடிநீர், உடல் தேவை)
2. பாதுகாப்புத்தேவை
(உடை, வீடு போன்றவை)
3. சமூகத்தேவை
(சொந்தங்கள், நட்புகள்)
4. சுயமரியாதை,
சமூக அந்தஸ்து தேவை
(பதவி, பட்டம்)
5. ஆத்மதிருப்தி தேவை
(சமூகத் தொண்டு தன்னலம் தாண்டியவை)

No comments:

Post a Comment