நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 12, 2019

தண்டனை


குட்டிக்கதை
12-04-2019
உங்க பையன் வகுப்பறையில வேணுன்னே நாற்காலியை தள்ளிவிட்டு உடைச்சுட்டானாம். தலைமையாசிரியர் உங்களை பள்ளிக்கூடத்துக்கு வர சொன்னார். என்று அவர் சொன்னதும் சேகர்பாபுவுக்கு ஆத்திரமாக வந்தது.
விக்னேஷ் பற்றி அந்த தெருவுக்கே தெரிந்ததுதான். கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஏதாவது வாகனம் அல்லது வீட்டின் கண்ணாடியை உடைத்து விடுவான். இதற்காக மாதம் ஐந்து முறையாவது நஷ்ட ஈடு வழங்குவது சேகர்பாபுவுக்கு ரெகுலர் செலவாகவே இருக்கும்.
தெருக்காரங்களுக்கு குடுத்ததை இப்ப பள்ளக்கூடத்துக்கு தரும்படியா பண்ணிட்டான்...எல்லாம் என் தலை எழுத்து..."என்று புலம்பிக் கொண்டே தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றார்.
சார்...என் பையனைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கட்டி வெச்சு நல்லா தோலை உரிங்க. பண நஷ்டத்தை நான் தந்துடுறேன்."என்றவாறு பர்சை வெளியில் எடுத்தார்.
உடனே தலைமையாசிரியர், உங்க கிட்ட யார் சார் பணம் கேட்டா?... பள்ளிக்கூடத்துல சரியில்லாத பர்னிச்சர்களை எல்லாம் சரிசெய்ய வர்ற சனிக் கிழமை கார்பெண்டர் வர்றாரு. ஒவ்வொரு பர்னிச்சரையும் சரி செய்ய அவர் எவ்வளவு நேரம் உழைக்கிறாரு, எப்படி எல்லாம் வேலை பார்க்குறாருன்னு உங்க பையன் எதிர்ல அமர்ந்து பார்க்கணும். இந்த தண்டனையில உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே? என்றார்.
தண்டனைன்னா ஒருத்தனை மேலும் முரடனாக்காம திருத்தணும்னு நினைக்குற உங்க நோக்கம் சிறப்பானது சார்..."என்று தலைமையாசிரியரைப் பாராட்டி விட்டு மன நிறைவுடன் கிளம்பினார் சேகர்பாபு.
-திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment