நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

அமேசான் நாவல் போட்டியில் ஐந்து லட்சம் பரிசு யாருக்கு?

2018 நவம்பர் 10 ஆம் தேதி முதல் 2019 பிப்ரவரி 9ஆம் தேதி வரை கலந்து கொள்ளும் வகையில் Amazon pentopublish2018 என்ற பெயரில் ஒரு எழுத்துப்போட்டியை நடத்தியது. படைப்புகள் கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வடிவிலும் இருக்கலாம்.
கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற போட்டியானது 2018ல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டது.
2 ஆயிரம் வார்த்தைகள் முதல் 10 ஆயிரம் வார்த்தைகளுக்கு உட்பட்ட படைப்புகள் சிறிய வடிவாகவும் (Short Form), 10 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட படைப்புகள் நீண்ட வடிவமாகவும் (Long Form) குறிப்பிடப்பட்டிருந்தன.





லாங் ஃபார்ம் என்ற வடிவத்தில்
ஆங்கிலம் – 2000த்துக்கும் அதிகமானவை
தமிழ் – 114
ஹிந்தி – 145
ஷார்ட் ஃபார்ம் என்ற வடிவத்தில்
ஆங்கிலம் – 969
தமிழ் – 124
இந்தி – 209
படைப்புகள் போட்டியில் கலந்து கொண்டவை. இந்த பட்டியலில் நான் எழுதி அனுப்பிய செங்கம் டிராவல்ஸ் சிறுகதையும் உண்டு.
2019 மார்ச் முதல் வாரத்தில் இறுதிச்சுற்றை அடைந்த கதைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலில் நான் எழுதிய குறுநாவல் இல்லை என்றாலும், போட்டி அறிவிப்பு வெளியான பிறகு ஒரு மாதம் கழித்து அவசர அவசர மற்ற வேலைகள், இடையூறுகளுக்கு மத்தியில் சுமார் 16 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட படைப்பாக உருவாக்கியிருப்பதை வெற்றியின் முதல்படியாகத்தான் நினைக்கிறேன்.
தமிழில் இவ்வளவு குறைவான படைப்புகள் கலந்து கொள்ளக் காரணம் நிறைய பேருக்கு தகவல் தெரியாது என்பதுடன், மொபைல் மட்டும் வைத்திருப்பவர்கள் இவ்வளவு பெரிய கதைகளை டைப் செய்து அனுப்புவது கடுமையான உடல் உழைப்பும் தேவைப்படும் சமாச்சாரம்தான்.
இனி இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று தெரிகிறது. அப்படி நடைபெற்றால் அதிகமான படைப்புகள் தமிழில் இருந்துதான் இடம்பெற்றது என்று இருக்க வேண்டும்.
விரைவில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுக்குரிய வெற்றிப்படைப்பு எது என்று அமேசான் தளத்தில் அறிவிக்கப்படலாம்.
–திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment