நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

விவிபாட்

பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் (விவிபாட்) பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங்கள் வாக்காளர்களை புகைப்படம் எடுக்கும் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கும் நபர்கள், அவர்களை மிரட்ட புதிய உத்தியை பயன் படுத்தி வருகின்றனர். அதாவது விவிபாட் இயந்திரங்கள் வாக்காளர்களைப் புகைப்படம் எடுக்கும். எனவே வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை புகைப்படம் மூலம் கண்டுபிடித்து விடுவோம் என்று அந்த நபர்கள் மிரட்டி வருகின்றனர்.
இது வெறும் வதந்தி. இதை வாக்காளர்கள் யாரும் நம்ப வேண்டாம். யாருக்கு வாக்களித் தோம் என்பதை உறுதி செய்ய ஒப்புகை சீட்டை மட்டுமே விவிபாட் இயந்திரம் வழங்கும். அந்த இயந்திரம் வாக்காளர்களைப் புகைப் படம் எடுக்காது. ஒப்புகை சீட்டு கூட இயந்திரத்திலிருந்து வெளியே வந்து 7 விநாடிகள் மட்டுமே நம் பார்வையில் இருக்கும் அடுத்த நொடி அந்த ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் உள்ளே சென்று விடும். இதுதொடர்பாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment