நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

யானையும் பொக்லைனும்


பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் என்றால் சில வகை பொம்மைகள், நாலைந்து வகை கார், பஸ் வடிவம் என்று வரையறுக்கப்பட்ட வகைகளில் மட்டும்தான் கிடைக்கும்.
ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான வகைகளில் பொம்மைகள் கிடைக்கின்றன. அதிலும் வாகன பொம்மை வகைகளை எடுத்துக் கொண்டால் இன்றைய காலகட்டத்தில் பொக்லைன் பொம்மையை அதிக குழந்தைகள் வைத்து விளையாடுவதை பார்க்க முடிந்தது. ஏன் பொக்லைன் வடிவ பொம்மைகள் அதிகமாக பிடித்திருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், யானையை பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியாது. 

யானை அதன் தும்பிக்கையால் மரத்தையோ வேறு சில பொருட்களையோ எடுப்பது குழந்தைகளை என்றும் கவரும் காட்சி. பொக்லைனின் பக்கெட் யானையின் தும்பிக்கையைப் போல் நீண்டு மடங்கி மணலை அள்ளுவதால் குழந்தைகளை அதிகம் கவர்ந்திருக்குமோ?

No comments:

Post a Comment