நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 12, 2019

எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய எம்.பி.ஏ - மூன்றெழுத்து மந்திரம்


துணுக்கு
12–04–2019
எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம் என்ற நூலை பல முறை நூலகத்தில் பார்த்தாலும் இது ஏதோ படிக்கும் மாணவர்களுக்கானது என்று நினைத்து அதை எடுக்கவே இல்லை.

சமீபத்தில் அந்த நூலில் என்னதான் இருக்கிறது எடுத்துப் படித்துப் பார்த்தேன்.
நிச்சயமாக இந்த புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல. பெட்டிக்கடை வைத்திருப்பவர்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் வரை அறிந்தோ அறியாமலோ, சிறப்பு கவனம் எடுத்தோ பின்பற்றப்படும் வழிமுறைகளும் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. இந்த தகவல்கள் நிச்சயம் பலருக்கும் புதியதாக இருக்கும். ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.
உதாரணம்:
இரும்புத் துண்டிலிருந்து கம்பி செய்வது, கம்பியை நேராக்குவது, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டுவது, தலைப் பாகத்தை உருண்டையாக மாற்றுவது, மறுமுனையை கூர்மையாக்குதல், துரு நீக்கி பாலீஷ் செய்தல் இவ்வாறு 18 வகையான செயல்களை செய்தால்தான் குண்டூசியை தயாரிக்க முடியும்.
இந்த வேலைகளை ஒரே ஒரு ஆள் செய்யலாம்தான். ஆனால் பதினெட்டு வேலைகளையும் ஒரே ஆள் செய்தால் ஒரு ஆள் ஒரு நாளைக்கு 20 குண்டூசிதான் செய்ய முடியும்.
ஆனால் ஆடம் ஸ்மித் என்ற பொருளியல் அறிஞரின் கோட்பாட்டின்படி வேலைப்பங்கீடு முறையில் பத்து பேர் குண்டூசி தயாரிப்பில் இறங்கினால் ஒரு நாளைக்கு ஒரு ஆள் 4000 க்கு குறையாமல் தயாரிக்கலாமாம். அதாவது சுமார் 40000 குண்டூசிகள். இதுதான் வேலைப் பங்கீட்டின் சூட்சுமம்.



*********
சோனி நிறுவனர் அகியோ மொரிட்டா ஊழியர்கள் சுய ஊக்கத்துடன் செயல்படுவது அவசியம் என்றும், அப்படி செய்தால் ஊழியர்களை மேய்க்கும் வேலை குறைவு என்று கூறினார்.

நம் நாட்டில்தான் பார்த்திருப்பீர்களே. ஐந்து ஊழியர்கள் சரியாக பணி செய்கிறார்களா என்று கண்காணிக்க இரண்டு அதிகாரிகள். அந்த அதிகாரிக்கு உயர் பதவியில் ஒருவர். இவர்கள் எல்லாருக்கும் மேலதிகாரி என்று ஒருவர். ஆக, ஐந்து பேர் வேலை பார்க்க, கண்காணிப்பாளராக நான்கு பேர் இருக்கும் அவலம்.
ஒவ்வொருவரும் சுய ஊக்கத்துடன் வேலை செய்தால் ஒன்பது பேருமே உற்பத்தியில் ஈடுபடலாம் இல்லையா?

****************
எஸ்.எல்.வி மூர்த்தியின் எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம் என்ற நூலில் இருந்து...
ஹென்றி போர்டு அசெம்ளி லைன் என்ற உற்பத்திமுறையை கண்டுபிடித்தார்.
ஏற்கனவேதொழிற்சாலையில் ஒரு வேலையை முடிக்கும் தொழிலாளர் அடுத்த பாகம் தயாராகும் இடத்திற்கும் சென்று அந்த வேலையை பார்ப்பது என்ற முறையில்தான் அப்போது உற்பத்தி முறை இருந்தது.
ஹென்றிபோர்டு கண்டறிந்த முறையில் தொழிலாளர் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய செய்ய, உற்பத்தி செய்ய வேண்டிய பாகம் ராட்சத அளவு பெல்ட் மூலம் நகர்ந்து கொண்டே இருக்கும்.
புதிய முறையால் தொழிலாளர்கள் இடம் பெயருவதில் விரயமான நேரம் பெருமளவு மிச்சப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு கார் தயாரிக்க 180 நிமிடம் ஆனது குறைக்கப்பட்டு 93 நிமிடங்களிலேயே போர்டு ஒரு காரை உற்பத்தி செய்தார்.
*******
அட...
வாட்ஸ்அப்பில் வலம் வந்த விழிப்புணர்வு விளம்பரம்!
*******
படித்ததும், கவனித்ததும்... திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment